Clicky

பிறப்பு 16 OCT 1962
இறப்பு 09 JAN 2026
திருமதி ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம்
B. A. Hons , DIP . IN ed, ஓய்வுநிலை பட்டதாரி ஆசிரியை - நயினாதீவு / கனடா, ஓய்வுநிலை ஆசிரியை- நு/ மராய தமிழ் பாடசாலை , யாழ் டொன் பொஸ்கோ, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம் , Peel District School Board(Canada)
வயது 63
திருமதி ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் 1962 - 2026 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shiyama Keerthanan - The Woodlands Ss 15 JAN 2026 Canada

ஜெயசண்முகபாமா எனும் ஒரு சகாப்தம் ஒரு சொல்லில் ‘அம்மா’ ஒரு வாழ்வில் எல்லாம். அந்த எல்லாம் இன்று நினைவுகளாக மாறியது. உடல் விலகினாலும் உங்கள்அன்பு என்றும் விலகாது அன்பும் அறிவும் கலந்த ஒரு பொக்கிஷம் அம்மா இலங்கையில் ‘kanthu teacher’ ஆக,கனடாவில் ‘Bama டீச்சர்’ ஆக,பல தலைமுறைகளுக்கு ஒளி ஏற்றிய வாழ்க்கை. ஆசிரியராக மட்டும் அல்ல,வழிகாட்டியாகவும் பல மனங்களை உருவாக்கினார். அம்மாவின் அன்பு, தியாகம், எங்கள் மூச்சில் என்றும் வாழும். உடல் பிரிந்தாலும் அம்மா எங்கள் உள்ளத்தில் நிரந்தரம் ஜெயசண்முகபாமா எனும் அந்த சகாப்தம் நினைவுகளாக அல்ல —எங்கள் வாழ்வின் ஒளியாக என்றும் தொடரும். அமைதியாக ஓய்வு பெறுங்கள் அம்மா, இந்த cancer உள்ள உலகம் உங்களுக்கு வேண்டாம்! இனி எம் கடவுளாக எங்களை கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றுங்கள். இப்பொழுது நீங்கள் மட்டும் தான் எங்கள் தெய்வம்... எங்களை எப்பொழுதும் கை விட வேண்டாம்🙏 Keerthanan, Shiyama& Aathira❤️