திதி:18/12/2024
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவே ஆசைச்சகோதரனே
அன்பாய் அரவனைத்து காத்தவனே
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அப்பா
உன் அன்புக்கு அது ஈடாகுமா?
பத்து ஆண்டு ஆனதுவோ பால் முகம் காணாமல்
பகலிரவாய் நாமிங்கே படும் துன்பம்
ஏனய்யா
பலர் வாழ பாதை காட்டி பாதி
வழியில் போனதென்ன
பாசம் வைத்த
நெஞ்சங்களை பரிதவிக்க விட்டதென்ன..!
நேசித்த உறவொன்று நிழலாகி போனதுவே
நிலையற்ற வாழ்வதனில் நினைவுகள் மட்டுமே
நெடுப்பாக நெஞ்சபதில் நித்தமும் கொதிக்கிறதே
நேற்றுபோல் எல்லாமே நெஞ்சுக்குள் நிற்கிறதே
நித்தமும் உனை நினைத்து சித்தமும் துடிக்கிறதே..!
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே
நீ வாழ்ந்த நினைவுகளும், வார்த்தைகளும்,
காற்றோடும் மூச்சோடும் எந்தாளும் கலந்திருக்கும்.
வலிகள் சுமந்து விழிகர் நனைந்து வாழும்
நாள் முழுக்க
உன்னை நினைந்து
வாழும் உன் குரும்பத்தினர்..!
ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி..!
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும் நீங்கா நினைவுகளில் என்றும் நீ!!!