யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே எங்கள் ஆருயிர் அப்பாவே
அன்போடு எங்களை அனுதினமும் காத்துவிட்டு
பண்போடு எங்களை பாசமாய் வளர்த்துவிட்டு
பாதிவரை கூட நின்று பார்க்காமல் போனதென்ன?
ஐந்து ஆண்டு ஆனதுவே அன்றுமுதல் இன்றுவரை
எத்தனையோ துன்பங்கள் எல்லாமே அறிந்து கொண்டோம்
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு அது ஈடாகுமா
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்கவைத்து
நித்தம் உங்களை நினைக்க வைத்து விட்டு
நிரந்தரமாய் பிரிவாய் என்று நினைத்து கூட பார்க்கவில்லை
ஏதும் அறியாத எம்பிஞ்சு மகளுக்கு
என்ன பதில் நான்சொல்வேன் என்று நீ அறிவாயோ...
அப்பா வேண்டும் என்று அவள் கேட்கும் போதெல்லாம்
அடைத்துக் கொள்ளும் ஐயா அப்போது நெஞ்சும் தான்
சொல்ல வார்த்தை இன்றி சொற்கள் தடுமாறும்
கண்கள் கொள்ளாமல் கண்ணீர் கரைந்தோடும்
வலிகள் சுமந்து தான் வாழ்கின்றோம் என்று அறிந்தும்
வார்த்தைகளால் வஞ்சிக்கும் மனிதர்களும் உண்டு இங்கே..
எல்லாம் இருந்தென்ன எம்மோடு நீ இன்றி
கல்லாய் கனக்குதய்யா கனவில் கூட இதயம்
நேற்றுபோல் எல்லாமே நெஞ்சோடு
நிறைந்திருக்க நித்தமும் உன்
நினைவுகளோடு நீங்காமல் வாழ்கின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
உன் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள்
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும் நீங்கா நினைவுகளில் என்றும் நீ!!!