7ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு
                    
                            
                வயது 39
            
                                    
            
                    Tribute
                    8
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல அகன்றோடி மறைந்தாலும்
 உங்கள் நினைவு என்றும் மறக்காது
 காலம் கொண்டு சென்றதோ - உம்மை
 தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
 நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
 ஆயிரமாயிரம் வினாக்கள் விடைசொல்ல
 ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட சில மணித்துளிகள்
 விழி அசைக்க மாட்டீரோ...?
 நீ தந்துவிட்டுப்போன காயம்
தினம் தினம் எமை கொல்வதால்
மீண்டும் ஒரு முறை வந்து உன் மூச்சினால்
 எமை உயிர்பித்துப் போ!
தேடுகின்றோம் தேம்பியே போகிறோம்
 எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
 நினைவலையாய் மனதோடு கலந்திருப்பாய் நீயே!
 ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி! 
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
                    
            
                    
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும் நீங்கா நினைவுகளில் என்றும் நீ!!!