யாழ். துன்னாலை தெற்கைப்(கிளான்) பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் ஜெத்தின் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், துரைராசா கமலராணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜேக்கப் ஜீவகாந்தி தம்பதிகளின் இளைய மகனும் ஆவார்.
அழகான உன்சிரிப்பு கண்முன்னே நிற்கிறதே! மெளனித்து நிற்கின்றோம்! மனம் தவித்து வெம்புகின்றோம்! பெற்றோர், உடன்பிறப்புக்கள், உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் நீயின்றி நடைப்பிணமாக வாழ்வதைப் பார்க்க முடியவில்லை காலம் தான் அனைவரது கண்ணீரையும் துடைக்க வேண்டும்.
“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்”
(லூக்கா 23:43)
கல்வியில் ஆசானாய்!
பாசத்தின் பிறப்பிடமாய்!
பண்பின் உறைவிடமாய்!
நட்பின் இலக்கணமாய்!
திக்கற்றோருக்குத் தெய்வமாய்!
துயருற்றோருக்கு துணைவனாய்!
எண்ணற்ற சேவைகள் செய்தாய்!
அன்பாலும், பண்பாலும்,
உன் எழிலான தோற்றத்தாலும்
அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தாய்.
முகத்தில் சோர்வுதனை கண்டதில்லை
சோகத்தையும் கண்டதில்லை.
வாடா முகத்தழகா! வடிவான கண்ணழகா!
முத்துப் பல்லழகா!
உன் சிரித்த முகத்தை
நாம் இனி
எப்பிறவியில் பார்ப்போம்.
எமை பரிதவிர்க விட்டு
பாதியிலே சென்றுவிட்டாய்.
எம்மை விட்டு உன் உடல் மறைந்தாலும்
எம் உள்ளங்களில் நீ என்றென்றும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.
உமது ஆத்மா சாந்தியடைய
நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Your son is a wonderful person and I had a chance to talk to him at least once in my life . Even if he disappeared from this world his memories and his soul will be with you forever! May his soul...