Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 JAN 1997
மறைவு 27 JUN 2025
அமரர் ஜெகதீஸ் சிங் (திலக்)
வயது 28
அமரர் ஜெகதீஸ் சிங் 1997 - 2025 Aachen, Germany Germany
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஜேர்மனி Aachen ஐப் பிறப்பிடமாகவும், Cologne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ் சிங் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 17/06/2026

என் அருமை மகனே!
எங்களைவிட்டு எங்கு சென்றாயோ

தவமிருந்து பெற்று
அளக்கி வளர்த்த செல்வமே…
தூக்கி வளர்த்த கை இன்று
வெறுமையாய் நின்றதே…

கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே

மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்பு மகனே...

வருடங்கள் ஒன்றல்ல ஆயிரம்
கடந்தாலும் எம்மை
வருடிகொண்டேயிருக்கும் - உன்
நினைவுகள் எம் உயிரோடு...!!!

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமை தம்பியே !

நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம்
உன் இழப்பை எதிர் கொண்டு
ஓராண்டு ஆகினதோ!!

உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..

எங்களை சிரிக்க வைத்த மாமா இன்று நினைவாகிவிட்டீர்,
உங்கள் அன்பின் நிழல் இன்னும் எங்களைத் தழுவிக் கொண்டே இருக்கிறது,
அக்கா மகள்களின் இதயத்தில் நீங்கள் என்றும் அழியாத பாசம்.

என்றும் உன் நினைவுகளுடன்....
அம்மா, அக்காமார், மருமக்கள். 

தகவல்: சுமதி குடும்பத்தினர், அம்மா, அக்கா, சின்னக்கா, சின்னத்தான், மருமக்கள், வைஸ்ணவி, ஐஸ்வர்யா, மித்திரா

Summary

Photos