யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம், 11ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை குமரைய்யா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மையெல்லாம் தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வாருங்கள்
உங்களது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பதுபோல உணர்கின்றோம்
குடும்பத்தின் குலவிளக்காய், அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய், வாழ்வின் வழிகாட்டியாய்
எம்முடனே எமக்காகவே வாழ்ந்த எம் தெய்வமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் தந்தையாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
We miss you Periappa. No one refill your place.