Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAR 1939
இறப்பு 11 MAR 2020
அமரர் ஐயம்பிள்ளை குமரையா 1939 - 2020 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம், 11ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை குமரையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் நான்கு உருண்டோடி மறைந்தாலும்
நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உங்களை தேட எம் மனமோ
உங்கள் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே

பொன்னுதிரும் உங்கள் சிரித்த முகம்
 என்றுமெம் மனதை விட்டகலாது
எம்மனக் கோவிலாக நீங்கள்
என்றும் வாழ்கிறீர்கள் ஐயா!

கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உங்கள் திருமுகத்தை
நாம் யாரிடமும் அறியலையே

உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்
வையகத்தில் நாம் வாழும்வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவுகள்
என்றும் நிலைத்திருக்கும்

ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!  

தகவல்: குடும்பத்தினர்