யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம், 11ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை குமரையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலே எமையெல்லாம் அணைத்தவரே
பண்பாலே பார்புகழ வாழ்ந்தவரே
பொன்மனமே உன்மனம் உறங்கி
இன்று ஓராண்டு ஆனதையா..
ஆனாலும் உணர்வுகளில் என்றும் உயிருடனே இருக்கிறீர்கள்
உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் காலப்பகுதிகளில்
தன்னிகரில்லாத தலைதனை பண்புக்காகவும்
கண்களை கருணைக்காகவும் மனத்தினை அன்பிற்காகவும்
குரலை இரக்கத்துக்காகவும் உதட்டினை புன்னகைக்காகவும்
கைகளை கொடைக்காகவும் கால்களை நேர்வழிக்காகவும்
இறுதிக்காலம் வரை பயன்படுத்தி வந்த உத்தமர் நீங்கள்
நீதி எப்போதும் தர்மத்தின் வழி நடக்கும் என வாழ்ந்து
காட்டிய பெருமைக்குரியவர்....
அயராத உழைப்பிலும் தளராத மன உறுதியிலும்
இடையறாத முயற்சியிலும் இறைபக்தியிலும்
முன்னுதாரணமாக விளங்கிய எங்கள் அன்புத் தெய்வமே
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்டு
விண்ணுலகம் சென்று ஓராண்டு கடந்தாலும் உங்கள்
நினைவலைகள் என்றும் எம்மனதை விட்டகலாது...
உங்கள் பிரிவால் துயரும் அன்பு மனைவி, ஆருயிர் பிள்ளைகள்,
அருமை மருமக்கள், ஆசைப் பேரப்பிள்ளைகள்,
உற்றார் உறவினரகள்.......
We miss you Periappa. No one refill your place.