Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 FEB 1936
இறப்பு 07 JUN 2019
அமரர் ஐயாத்துரை நாகேந்திரன் 1936 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 19-06-2026

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை நாகேந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குலவிளக்கே
 எங்கு பார்த்தாலும் நம் கண்ணுக்குள்
உங்கள் முகம் தெரிகிறதே
என் தெய்வமே!

ஏன் தான் திடீர் என்று எம்மை
 துடியாய் தவிக்க விட்டு சென்றீர்கள்
ஒருமுறை உங்கள் அன்பான முகம்
பார்க்க தேடித்தேடி அலைகின்றேனே!

 எத்தனை ஆண்டுகள் போனாலும்
எம்மால் உங்களை மறந்து வாழ முடியாதப்பா
ஏன்தான் எனக்கு இந்த வேதனை...

ஆளத்துயிலில் துடியாய் தவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் எம் தந்தையே!
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
 உங்களைப் போன்று அன்புக் காட்ட
யாரும் இல்லை அப்பா!

உங்கள் வியர்வையில் நாம் வாழ்ந்தோம் 
மீளாப் பிரிவில் தாளாது தவிக்கின்றோம்
தவிப்புகள் எதுவானலும் உன் முகம்
மலர்ந்த சிரிப்பை எப்போ எங்கே காண்போம்!

அன்னாரின் நினைவுத்திதி 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் உணவு உபசரிப்பு நிகழ்வு நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்