8ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இந்திரபூபதி மாணிக்கவாசகர்
1931 -
2016
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திரபூபதி மாணிக்கவாசகர் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டு ஆனதம்மா உமைப்பிரிந்து
ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
இன்று
எம் அன்னை எமை விட்டு
விண்ணுலகம் சென்றாலும் உம்மை என்றும்
எண்ணியே எம்முலகம் சுற்றும்!
இவ்வுலகம் உள்ளவரை....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்