2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி செல்லத்துரை VMT அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!
புன்னகை தந்து எண்ணமதில்
வண்ணமாய் நிறைந்தவரே
காலமெல்லாம் மாறாத வலி
தந்துஎங்கு சென்றீரோ...?
விழியினில் வலியினை தந்து
மறைவினில் ஏக்கத்தை தந்து
எங்கே சென்றீரோ...!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாங்கள் உணருகின்றோம்..
ஈராண்டு கடந்தாலும் எம் இதயத் தெய்வத்திற்கு
நீங்காத நினைவுகளால் என்றென்றும் வணங்கிடுவோம்.
தகவல்:
குடும்பத்தினர்