
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹருனியன் குணசேகரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எண்ணிலடங்கா கனவுகளுடன் நானும்
உன் வாலிபத்தின் வாழ்வுதனை- எண்ணி
வளர்பிறையாய் இருந்தோமடா
எல்லோர் மனங்களிலும் அன்பாக அகம் மலரச் செய்தாயே
பூமிக்கு வந்த வேளை முடிந்ததென்று-நீ
சிறுவதில் உன் பயணத்தை முடித்து விட்டாயோ மகனே!
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் பிரிவால்
சிரித்த உன் அழகு முகமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கிறது எங்கள் உள்ளங்களில்
அழியாத ஓவியமாக
எம் வாழ்வின் உதயமே நாம்
தேடி எடுத்த பொக்கிஷமே
காலன் கண் வைத்தானோ
உன்னை அழைத்து செல்வதற்கு...!!!
உன் ஆத்மா சாந்திக்காக இறைவனை தினமும்
வேண்டுகிறோம்.
அப்பா, அம்மா, சகோதரிகள் மற்றும் உறவினர்கள்