1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹருனியன் குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகன் ஹருனியன்!
ஆறுதில்லை எம் மனமே!!!
ஓராண்டு உருண்டு ஓடினாலும்
என்றும் எம் கண்முன்னே நிற்கிறது உன் பூமுகம்
உன்னை இன்நிலைக்கு ஆளாக்கியது
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை இறைவனின் விதியோ?
கடல் வடிவில் காலனவன் வந்து
உன்னை எங்களிடமிருந்து பறித்தானோடா?
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களில் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
தகவல்:
குடும்பத்தினர்