பி றப்புக்கும் இறப்புக்கும் இடையே ர கசியம் வைத்ததால் உனது பா ர்வையில் காலன் மாயம் செய்தானோ பி றந்தாலும் இறந்தாலும் உன்போன்ற ர த்தினக்கல் ஒன்று பா ரினில் தேடினாலும் அரிது தானோ பி ணிக்கு மருந்தாக பிறர் வாழ்வில் ர வியாக உதவிகள் புரிந்து நின்ற பா ங்கனே இடையினில் சென்றதேனோ பி ச்சை புகினும் கற்கை நன்றே என ர ட்சிக்க துணிந்து எழுந்த பா சமுள்ள உன் மனிதம் கரைந்ததேனோ பி ணக்கு என்று வந்தால் பின்வாங்கி ர களை இன்றி மனம் தெளியும் பா ல்போன்ற உன் இதயம் நின்றதேனோ பி ரபா எனும் நட்பு பேருறவின் ர ம்மியமான உனது குரலோசை பா லைவனத்தென்றலாய் காயந்ததேனோ பி ள்ளையாய் உனது அம்மாவின் ர ட்சகனாய் இன்றுவரை பா ர்த்திருந்து பாதியில் மறைந்ததேனோ பி ரியமான மனையாள் புலம்பியிருக்க ர கசியமாய் மாயம் செய்து பா தை மாறி பயணம் செய்ததேனோ பி ள்ளைகளின் தாயுமானவனாய் ர சிகனாய் ஆசானாய் இருந்த பா சப்பறவை வானுலகம் சென்றதேனோ பி றப்பினில் சேர்ந்த சோதரர்கள் மனம் ர ணமாக்கி கலங்க விட்டு பாசக்கயிற்றுக்கு நேசக்கரம்நீட்டியதேனோ பி ரபா பிரபா என நண்பர் நாம் ர க்கை கட்டி உன்னுடன் பறந்திட பா தியில் எமை பிரிந்து ஏகியதேனோ பிரபா உனது ஆத்மா சாந்தியடைய விடை தெரியாது விழித்திருக்கும் உன் நடபுறவுகள் அனைவரும் ஆறாத்துயருடன் உனை அனுப்பிவைக்கிறோம் "ஓம் சாந்தி"
Dear Mr Gurunathan Prapharan (Prapa), You have surprised all of us. The immediate family, your loving customers, your dedicated loving friends of very many years. It is very sad and unbearable....