

யாழ்.பல்கலைக்கழக இறுதி நாட்களில்(1986) மேலும் நெருக்கமடைந்த அன்புக்கும் பாசத்திற்கும் உரிய நண்பன் பிரபா உடனான எனது நட்பு, போர்க்காலங்களில் விடுபட்டு, மீண்டும் Viber ல் தொடங்கி, WhatsApp மூலம் உயிர் பெற்றிருந்த வேளையில்,.. ஒரு நல்ல உற்ற நண்பனை எனது வாழ்க்கையில் இழந்து விட்டேன்... யாழ். பல்கலைக்கழகம் தந்த ஓர் அருமையான, அன்புள்ளம் கொண்ட, எளிமையான, உற்ற நண்பன் இந்த பிரபா! நாம் வணிக முகாமைத்துவ மாணவர் சங்கத்தில் பிரதான பொறுப்பினை ஏற்றிருந்த படியால் இறுதியாண்டு பரீட்சைகள் முடிவடைந்து இருந்த பொழுதிலும், 1986 டிசம்பர் வரை நானும் புவிராஜும் யாழில் நின்று, நண்பன் பிரபாவுடன் இணைந்து, சங்கத்தின் வெளியீடான "விருட்சம்" மலரை வெளியிட்டதன் பின்னரே நாம் எங்கள் வீடுகளுக்குச் சென்றோம். நண்பர்கள் மத்தியில் தனது அன்பினாலும் பாசத்தினாலும் எல்லாரையும் இணைத்து, விருட்சமாக வளர்த்தெடுத்த பிரபா, எம்மை எல்லாம் விட்டு பிரிந்தது ஏனோ இடைநடுவில்!!! இந்த துயரத்திலிருந்து மீள எத்தனை நாட்கள் எடுக்குமோ தெரியவில்லை... இத்துயர் வேளையில் உங்கள் அனைவரினதும் சோகத்திலும் துயரத்திலும் நானும் பங்கு கொள்கின்றேன். பிரபாவின் ஆத்மா சாந்தி அடைய , உங்களோடு சேர்ந்து எனது பிரார்த்தனைகளும்! எல்லாம் வல்ல இறைவன் பிரபாவின் மனைவி, மகள், மகன் ஆகியோர்களுக்கும், உறவினர்கள் நண்பர்களுக்கும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பினை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியினை வழங்கி, அவரின் குடும்பத்தின் தேவைகள் யாவற்றையும் பூர்த்தி செய்ய வேண்டும் என வேண்டுகின்றேன். ஆழ்ந்த இரங்கல்களுடன், உற்ற நண்பனை இழந்த சோகத்தில்...உங்களுடன்... டேவிட் ??????????? ( 82/86 ஆண்டு: வணிக முகாமைத்துவ கலைப்பீடம்).
Dear Mr Gurunathan Prapharan (Prapa), You have surprised all of us. The immediate family, your loving customers, your dedicated loving friends of very many years. It is very sad and unbearable....