Clicky

பிறப்பு 14 AUG 1963
இறப்பு 23 FEB 2021
அமரர் குருநாதன் பிரபாகரன் (பிரபா)
The Old Stables General Stores உரிமையாளர், யாழ் மத்திய கல்லூரி, யாழ் பல்கலைகழக வர்த்தக பீட பழைய மாணவர்
வயது 57
அமரர் குருநாதன் பிரபாகரன் 1963 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gurunathan Prapaharan
1963 - 2021

அண்ணன் அவர்களின் தொடர்பு எனக்கு முகப்புத்தகத்தினூடாக கிடைத்தது. நான் யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவன் அத்துடன் அங்கு தற்போது நான் கல்வி கற்பிப்பதை அறிந்து என்னுடன் மிகவும் அன்போடு பழகினார். அடிக்கடி Whatsapp மற்றும் Messanger ஊடாக கதைத்துக்கொள்வார். கல்லூரியின் மீது மிகவும் பற்றும் பாசமும் கொண்டவர் என்பதை அறிந்து கொண்டேன் . கல்லூரியின் கல்வி வளர்ச்சி தொடர்பாகவும் துடுப்பாட்டம் தொடர்பாகவும் அக்கறையுடன் உரையாடும் அண்ணனை நான் அடிக்கடி வியப்புடன் சிந்திப்பதுண்டு...... இவரைப் போன்ற பழைய மாணவர்களை இழப்பது கல்லூரிக்கு பேரிழப்பாகும். அண்ணாவின் குரலை இனி கேட்க முடியாது என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. யாழ் வந்து உம்மை நேரில் சந்திப்பேன் என்று கூறினீர்கள்....... ஆனால் எம்மிடம் சொல்லாமலே போய் விட்டீர்கள் ..... அண்ணா உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். எங்கள் கல்லூரியை விழ விடாமல் பாதுகாப்போம்.நிம்மதியாக உறங்குங்கள். அனைத்து உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். "மத்தியின் மணிக்கொடி நித்தமும் நிலைக்கும்" "Deshakeerthi" S Subethar Fernando. Oldboy 1987-2000 Teacher Jaffna Central College Jaffna Srilanka 0772528824.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Feb, 2021
நன்றி நவிலல் Mon, 22 Mar, 2021