யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாஸ் குணநாயகி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 09-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 06.30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 11-08-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், பந்தல் வழங்கிய நீர்வேலி கிருஷ்ணா அவர்களுக்கும், இறுதிக்கிரியை நேரலை செய்த சோபிநாதன் அவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சுதுமலை வடக்கு,
மானிப்பாய்.
Deepest sympathies to komalatha & family. Our thoughts and prayers are with you all during this difficult time. May her soul rest in peace. Lokeni, England .