1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவதாஸ் குணநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-07-2024
ஆண்டொன்று ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே! தெய்வமே!
பண்ணிய பாவமென்ன உங்களைப்
பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்
மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல எம்
இதய வான் பரப்பில் ஒளி வீசும் துருவ நட்சத்திரம்
நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Deepest sympathies to komalatha & family. Our thoughts and prayers are with you all during this difficult time. May her soul rest in peace. Lokeni, England .