Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 26 OCT 1958
மறைவு 24 MAY 2025
அமரர் குணாளன் லீலாபிலோமினா (லீலா)
வயது 66
அமரர் குணாளன் லீலாபிலோமினா 1958 - 2025 ஊரிக்காடு வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரிக்காடு சிதம்பராய் வடக்கு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல 37, அன்பு போன் மொபைல் டெக் பழைய கச்சேரி முன்பாக A9 வீதி அருகாமை கிளிநகர் கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணாளன் லீலாபிலோமினா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு! 

உங்கள் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos