யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிசங்கரி தவராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் என்
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் -
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
நீங்கள் என்னை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!
சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்
எங்கே? உன் மடியம்மா
ஐந்து ஆண்டு போனாலும்
ஆறவில்லை எம் கவலை
என் கவலை சொல்லியழ
பூமிதனில் யாருமில்லை
ஈசனவன் காலடியில் என்றென்றும்
வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாது
நிழலாக நாமிருப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
We still remember the days and years we spent with her while we were in Colombo. Even we visit her whenever we travel to Sri Lanka. Bala and Raji