
கிளிநொச்சி திருவையாறு 3ம் கட்டை வில்சன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் மோகனதாஸ் அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன் (முன்னாள் கோவிந்தன் கடை உரிமையாளர்), தேனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சீதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷிகன்(பதுமன்), கீர்த்திகன், கீர்த்திகா(சுஜானா- கிளி/ திருவையாறு மகாவித்யாலய மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அரிதாஸ், சரோஜினி, பரமேஸ்வரி, இலக்குமி, அமராவதி, ருக்மணி, சந்திரதாஸ், சிவதாஸ், தாமரைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரத்தினம், செல்வராசா, நவமணி, காலஞ்சென்றவர்களான மாதவன், சிவானந்தம் மற்றும் முத்துலிங்கம், சந்திரசேகரம்(அண்ணா), கோமதி, சகுந்தலாதேவி, குகதாஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தம்பி செல்வராஜா எனது நண்பன் மோகனதாஸ் இறந்தது அறிந்துளான் எனது ஆழ்ந்த அனுதாபம். மணைவி, சந்திரன், சிவா, மற்றும் எல்லோருக்கும் எனது அனுதாபத்தினை பாகித்துக்கொள்ளவும் , பரந்தாமன் குடும்பம் கனடா ,