யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கொட்பிறி செல்வநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.
எமக்கு யாருமில்லை
ஏங்குகின்றோம் உம் நினைவால்
நீண்ட ஆயுள் என்றுரைத்தீர்கள்
தவிக்க விட்டு மறைந்துவிட்டீர்களே அப்பா
அப்பா என்று உம் மகன்
அணைக்கு முன்
விடை கொடுக்க முடியாது என
கண் உறங்கினீரோ
அப்பா, பெப்பா என்ற குரல் உன் காதில் ஒலிக்கவில்லையா
இறைவன் குரல் கேட்டு சென்று விட்டீர்களே
யாருமில்லை எமக்கு
உம் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை
உலகில் யாரும் தரப்போவதில்லை
உம்மைத் தவிர...
எம் பக்கத்தில் என்றும் இருந்தீர்களே
வழிநடத்திய உம் குரல் எங்கே
ஐயோ வார்த்தைகளின்றி தவிக்கின்றோம்
உம் வதனம் காணாது
அழகான வாழ்வுதனை
பாசத்தால் கொடுத்தீர்கள்
உம் பிரிவால் அழியாத சோகத்தை ஏன் தந்தீர்கள்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 29-05-2021 சனிக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் Fr.Thevaraj அடிகளார் அவர்களால் திருப்பலிப்பூசை ஒப்புக்கொடுக்கப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.