

அம்மா என்று அறிமுகம் ஆனவரே அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில் :lol: வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான் எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள் எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள் வாருங்கள் மீண்டும் இவ்வுலகில் வந்து எமக்கு ஆறுதல் தாருங்கள் தலைவி இல்லாத வீட்டில் தலையணை நனைக்கின்றது ஒவ்வொரு இரவும் நடக்கின்றோம் நீர் சொல்லித்தந்த பாதைகளில் நடக்கின்றீர் நீரும் நிழலாய் எம்முடன்.