Clicky

பிறப்பு 19 MAY 1939
இறப்பு 14 NOV 2019
அமரர் ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின்
வயது 80
அமரர் ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் 1939 - 2019 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Gnanapragasam Maryjosephine
1939 - 2019

கண்ணில் அழுகை ஓயவில்லை – எம் கனவு வாழ்க்கை புரியவில்லை, விழிகள் உன்னை தேடுகையில் விழி நீர் ஆறாய் ஓடுதம்மா! பெற்றவர் உற்றவர் பெருமை கொள்ள பேரொளியாய் ஒளிர்ந்தாய் நீ – அன்று உற்றவரை நேசித்து உயர்வாய் வாழ்ந்தாயே! பெற்றெடுத்த செல்வங்களில் பேரன்பை ஊட்டி விட்டு – இன்றெம்மை தத்தளிக்க விட்டு விட்டு தடம் மாறிப் பறந்து விட்டாய்! பிள்ளைகள் தேடுகின்றார் அம்மா எங்கே என, நிலையற்ற இவ் வாழ்வில் நிலையான சோதி பெறா ஒளியில் சொல்லாமல் சென்றதென்ன? வாழ்வை வென்று விட்டேனென்று வானம் நீ சென்று விட்டாய் ! ஏங்கித் தவித்து இன்று ஓராண்டை முடித்து விட்டோம்! நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தி அடைய எம் கண்ணீரை மலர்களாய் காணிக்கையாக்கி பிரார்த்திக்கின்றோம்!

Write Tribute