அமரர் கணபதிப்பிள்ளை உலகநாதன் (சி.மு)
பிறப்பு:28-01-1939 இறப்பு: 11-12-2021
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை உலகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் திலகவதி உலகநாதன்
பிறப்பு: 01-01-1944 இறப்பு: 21-01-2014
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி உலகநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்ந்த நாட்களை
வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
உடைந்தது எங்கள் இதயமும்தான்!
நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!
அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
என்புருக ஏங்கிட்டு பார்க்க
எம்மை துயரிலே மூழ்க வைத்து
பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?
சோகத்தின் சுமைதனை
சுமக்கின்றோம் இதயமதில்
பாசத்தின் உறவுகள் நாம்
பரிதவித்து வாடுகின்றோம்
நேசத்தை மறந்து ஏன்
இருவரும் நெடுந்தூரம் சென்றீர்கள்?
Please accept our heartfelt condolences.