Clicky

2ம், 10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்கள் கணபதிப்பிள்ளை உலகநாதன், திலகவதி உலகநாதன்
இறப்பு - 11 DEC 2021
அமரர்கள் கணபதிப்பிள்ளை உலகநாதன், திலகவதி உலகநாதன் 2021 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் கணபதிப்பிள்ளை உலகநாதன் (சி.மு)
பிறப்பு:28-01-1939
இறப்பு: 11-12-2021

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை உலகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில் உருண்டோட
மீளாமல் தவிக்கின்றோம் உங்கள் நினைவினிலே!

உங்களை போல்
ஆற்றுவார் யாருமின்றி
தவிக்கின்றோம் நாமிங்கு அப்பா!

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை!

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

-------------------------------------------------------------

அமரர் திலகவதி உலகநாதன்
 பிறப்பு: 01-01-1944
 இறப்பு: 21-01-2014

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி உலகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
யாருமில்லை அம்மா!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 11 Dec, 2021
நன்றி நவிலல் Tue, 11 Jan, 2022