2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதி இரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு ஓடி மறைந்தாலும்
ஆறமுடியவில்லை எம்மால்!..!
ஆறுதல் சொல்ல
ஆண்டவனே வந்தாலும்
அப்பா
உன் ஆருயிர் அன்புக்கு ஈடாகுமா?
அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத
பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
என்னை அரவணைத்து அண்ணம்
ஊட்டிய
கைகள் எங்கே அப்பா
முத்தம்
இட்ட உங்கள் மூச்சு எங்கே அப்பா
எங்கே எப்போ உங்களை
காண்போம் என்று
தவிக்கின்றோம்...
உங்களை இழந்து உயிர்வாழும்
நாங்களும் இனி உணர்வற்ற
வெறும் நடைப்பிணங்கள் தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
இரத்தினம் மங்களாசினி(மகள்) குடும்பத்தினர்