3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிரான்சீஸ்கம்மா அமலதாஸ்
(வசந்தகுமாரி)
வயது 62

அமரர் பிரான்சீஸ்கம்மா அமலதாஸ்
1958 -
2020
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்றும் உங்கள் நினைவில்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பெரியம்மாவின் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், உற்றார், உறவினர், தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்