2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிரான்சீஸ்கம்மா அமலதாஸ்
(வசந்தகுமாரி)
வயது 62
அமரர் பிரான்சீஸ்கம்மா அமலதாஸ்
1958 -
2020
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் அம்மா
அம்மா என்ற மூன்று எழுத்தில்
எங்களின் உயிர் மூச்சு
ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறவில்லை எங்களது மனது
வாழ்கை என்னும் மேடையில்
நடிக்க தெரியாத
ஒரு கதாபாத்திரம் நீ அம்மா
உன் கைக்குள் இருந்த வரை எங்கள் உலகம்
அழகாகத் தான் இருந்தது
வாழ்கை சொல்லி தரும் பாடம் முழுமையாக நாம்
படிக்கும் முன்னரே நீ இல்லை இது தான்
உலகம், உறவு, பாசம், என்று புரிய வைத்தாய்
இரு ஆண்டுகள் சென்றாலும் ஆறவில்லை எம்
இதயம் எப்போதும் உங்கள் நினைவுகள் தான்
எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும்
உங்கள் பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கிறோம் அம்மா....
தகவல்:
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பெரியம்மாவின் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், உற்றார், உறவினர், தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்