யாழ்ப்பாணம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் ?
அப்பா உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய் பாசம் ?
ஓடும் ரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்,
உன் வேர்வைத்துளி தான்பா நான் படிக்கும் இதிகாசம்
உன்னை போல பூமி இல்ல
உன்னை விட சாமி இல்ல
சொல்ல வார்த்தை ஏதும் இல்ல - உன்
சொல்ல விட வேதம் இல்ல
கண்டிக்கும் உன்னோட பாசத்துக்கு முன்னே
கடவுளும் கூட நிகர்இல்ல - அப்பா அப்பா !
வறுமையை சொன்னதில்லை நீ -வாடி
மனம் நின்னதில்லை - எதையுமே தனக்கென நீ
இது வரை எண்ணவில்ல !
சொத்து சுகம் வந்ததில்ல -ஒரு
சொந்தம் அள்ளி தந்ததில்ல -எத்தனையோ
துன்பத்திலும் நீ யாரையுமே நொந்ததில்ல !
ஓழச்சி ஓழச்சி நீ ஓடானே -நா
எழுத படிக்க நீ ஏடானே
நேர்மை வழி போகும் தேரானே - நா
நிலைச்சு நிக்க நீ வேரானே !
அல்லும் பகலும் துயர கடலில் நீராடி -என்ன
ஆலமரமா ஆளாக்கின போராடி ! அப்பா அப்பா !
அப்பா நீ மந்திரமா ? பாடு பட்ட எந்திரமா ?
நம்பிக்கையா நீ இருந்தே - நான் வளர்ந்தேன் கோபுரமா !
ஓயாத சக்கரமா ? கண்ணிமை போல் பத்திரமா எனை
பாதுகாத்து நீ வளர்த்த பாங்க நான்சொல்லணுமா ?
தோளில் சாய்த்தென்ன ஆராட்டி,
துவண்டு விழும் போது சீராட்டி,
பாச மழை தூவி பாராட்டி,
பக்க துணை நின்னு வழி காட்டி,
என்ன வளர்த்த உன் பாசம் தான் மாறாது - ஏழு
ஜென்மத்திலும் நான் பட்ட கடன் தான் தீராது ! அப்பா அப்பா !
பூமி போல உன் பொறுமை, தீராதையா உன் பெருமை !
காலத்துக்கும் உன் கடமை, ஓயலயே என்ன கொடுமைய !
கண்ணீர் துளி பாடுதய்யா பெத்தவனே உன் அருமை !
எதையும் எதிர்பார்க்கா தியாகம் நீ!
எந்தன் வேர் தேடும் மேகம் நீ!
மூச்சில கலந்தாடும் சொந்தம் நீ!
முடிவே இல்லாத பந்தம் நீ!
நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம் - அட
நீ தான்பா என் வாழ்கையோட ஆதாரம் ! அப்பா ! அப்பா !
அப்பா, ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் மனதில் நாளும்
நிழலாடும் உங்கள் நினைவுகளுடன் இன்றும் வாழும் உங்கள்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும்
உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆத்மா அந்த ஆண்டவன்
அடியில் நித்திய சங்கமமாக அந்த ஆண்டவனை
வேண்டுகிறோம்.
ஏப்ரல் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை காலை 9.20 மணியில்
இருந்து 10 மணி வரை 13 rue Etienne Dolet, 93140 Bondy (Bondy gare
க்கு அருகாமையில்) என்னும் முகவரியிலுள்ள Paroisse Saint Louis
தேவாலயத்தில் அப்பாவின் ஓராண்டு நினைவுப் பூசை பிரெஞ்சு
மொழியில் நடைப்பெறவுள்ளது என்பதை அனைவருக்கும் அறியத்
தருகின்றோம்.