31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அமரர் பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை
வயது 87
அமரர் பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை
1933 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, நீர்கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்களின் 31ம் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குளிரான காற்றும், சாரல் தூவும் வானமும்,
முகம் காட்ட துடிக்கும் சூரியனும், இருளை தேடும் நிலவும்
எங்கே நீங்கள் என்று ஏங்கி தேடுதே !
என்ன பதில் சொல்வோம் நாம் அப்பா??
கொச்சை பேச்சு பேசும் உங்கள் பச்சைக் கிளியும்,
ஒற்றை வார்த்தை பேச மறுகின்றதே,
உங்களை காணவில்லை என்று !!
எப்படி அதற்கு சொல்வோம் அப்பா ??
வாழ்க்கையின் பாடத்தை ஒற்றை வரிகளில்
எம் நெஞ்சில் துளை போட்டு சென்றவரே,
உங்கள் நினைவுகள் எம் மார்பு கூட்டுக்குள்
குருவி குஞ்சாய் துடிக்கிறதே அப்பா !!
எம் தனிமைக்கும், வலிகளுக்கும் மருந்தாக,
உங்கள் கைகள் எங்கே அப்பா, எம் தலை கோத ??
முகத்தில் புன்னகை சுமந்து,
மனதில் சுமைகளை தாங்கிய தெய்வமே,
கண்களில் கண்டிப்பையும், இதயத்தில் பாசத்தையும்,
எல்லோரிடமும் நேசத்தையும், ஏதிலியிடம்கருணையையும்
ஒன்றாக வைத்திருந்தீர்களே அப்பா !
நாங்கள் மட்டுமா உங்களை அப்பா என்றழைத்தோம் ?
உங்களை அறிந்தவர்கள் எல்லோருக்கும்
நீங்கள் அப்பா தானே அப்பா?
அப்பா அப்பா என்றழைத்த எம் பாதங்கள்
மண்ணில் பதியும் முன்னரே,
உங்கள் மார்பிலும் வயிற்றிலும் நடை பழகினவே அப்பா !
நீங்கள் கண்ட உலகை விட அதிகமாய் நாம் காண
எமை தோளில் தூக்கி சுமந்த தெய்வமே !
உங்களை விதைத்து எங்களை வளர்த்தவரே,
தோழனாய் கடைசி வரை தோள் கொடுத்தவரே,
அப்பா என்னும் ஒற்றை சொலினுள் உலகையே அடைத்தவரே
எங்கே சென்றீர்கள் ? ஓய்வெடுக்கவா ?
வெறுமையும், வெற்றிடமும் வாடுகிறதே அப்பா !!
நாம் நடை பழகிய போது, உங்கள் விரல் எமக்கு வழிகாட்டி !
நீங்கள் தளர்ந்து தடுமாறிய போது உங்கள் கரம் கோர்த்து
கடைசி வரைபயணித்தோமே அப்பா! ஏன் இந்த அவசரம் ?
உங்கள் கண்டிப்புகளை விட, பாசத்தில் நீங்கள் விடும்
கண்ணீரால் தான் நாம் கலங்கி நின்றோம்.
உங்கள் கடைசி ஆசையால் எம் கோபங்களை கொன்று,
எம் எதிர் காலத்தையே மாற்றியவரே அப்பா,
உணர்வுகளால் தோற்று விட்டோம் உங்களிடம் அப்பா !! - ஆனால்
உங்கள் நினைவுகளால் நிறைந்து நிற்கின்றோம் அப்பா !
கடவுள் தந்த வரம் இல்லை நீங்கள்!
கடவுளே வரமாய் கிடைத்தவரே நீங்கள் அப்பா !
மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் உங்களை நாம் மார்பிலும் தோளிலும்
சுமக்க வேண்டும் அப்பா !
நிம்மதியாய் உறங்குங்கள் அப்பா !
உறுதியாய் சொல்கின்றோம் !
நீங்கள் காட்டிய வழியில், நடப்போம் நாங்கள் ஒன்றாய் !!
எங்கள் அன்பு தந்தையின் மறைவு செய்தி கேள்வியுற்று நேரிலும், தொலைபேசி மூலமும், இணையத்தளங்கள், வலைத்தளங்கள், முக நூல் பக்கங்கள் ஊடாகவும், வானொலி மூலமாகவும் எமது ஆறா துயரில் பங்கு கொண்டு, எமக்கு ஆறுதல் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், இன்றைய சமூக சூழ்நிலையிலும், தொலை தூரங்களில் இருந்து வந்தும் எங்கள் தந்தைக்கு இறுதி வணக்கம் செலுத்தியவர்களுக்கும், மலர் கொத்துகள், மலர் வளையங்கள் கொண்டு வந்தவர்களுக்கும், அனுப்பி வைத்தவர்களுக்கும், எமது தந்தைக்கு சுவரொட்டிகள் வெளியிட்டவர்கள், சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் அனைவருக்கும், இறுதி நிகழ்வுகளை தொகுத்து தந்த நண்பருக்கும், எங்கள் தந்தையை பற்றி இரங்கல் உரை ஆற்றிய அனைவருக்கும், காணொளி எடுத்து உதவிய நண்பருக்கும், திருப்பலி பூசையை நல்ல முறையாக நடாத்திய அருட்தந்தை மற்றும் அவரின் பாடல் குழாமினருக்கும், திருப்பலி பூசையின் போதும், தகனகிரியைகள் நடை பெற்ற போதும் முக்கியமாக இன்றைய சுகாதார நிலைமைகள் கருதி செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஒழுங்கமைத்து சீராக நடாத்த உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும், தகன கிரிகைககளின் பின்னர் உணவுகள், தேநீர், கோப்பி, பானங்கள் வழங்கியவர்களுக்கும், வாகன உதவி புரிந்தவர்களுக்கும், மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்