

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து சென்றதேனோ?
வாழ்க்கையில் வழிகாட்டியாக
அர்த்தங்கள் பல சொல்லி
பாதியில் பிரிந்த மாயம் தன்னை
நம்ப மறுக்கின்றன எங்கள் மனங்கள்
எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து நான்காண்டு
சென்றபோதும் எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
நீங்கள் காட்டிய பாதையில் நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்
உங்கள் கடமைகளை நேர்மையுடனும்
பொறுமையுடனும் செய்து வந்தீர்களே இன்று
எல்லா பொறுப்புக்களை முடித்து விட்டேன் என்ற
பெருமையுடன் எம்மை தவிக்க விட்டு சென்றீர்களே அப்பா!
அறிவுரை சொல்லவோ புத்திமதி சொல்லவோ
எமக்கு நீங்கள் இன்றி தவிக்கின்றோம்
எது நன்மை தீமை என்று
சொல்ல நீங்கள் இல்லையே!
உங்களை பற்றி மற்றவர்கள்
பெருமையாக சொல்ல தலை முறை உயர்கிறது..
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
Deepest sympathy from Alal and Family from Toronto