யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நமசிவாயம் அவர்களின் நன்றி நவிலல்.
"நன்றி மறப்பது நன்றன்று"
என்ற வாக்கிற்கிணங்க, சிவபதம் அடைந்த அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு, நாம் துயருற்ற வேளையில், நேரில் வந்தும், தொலைபேசிêடாகவும், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும் எங்களுக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் நன்றிகள். அன்னாரின் இறுதிக்கிரியைகளில் அயலிலிருந்தும், தொலைவிலிருந்தும் சமூகமளித்தவர்களையும், அதற்கு வேண்டிய ஓத்துழைப்புகளை வழங்கியவர்களையும், இயற்கை கொடுத்த வரமாய், எம் குடும்பத்துக்கு உதிர்த்த உறவுகளாய் பார்க்கின்றோம். அவர்களின் உதவியை என்றும் மறவோம். மேலும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இல்லக் கிரியைகளில் கலந்து கொண்டு ஆத்மா சாந்திப் பிரார்த்தனைகளில் பங்குபற்றியோருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அனைத்து குடும்பத்தினர் சார்பாக மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எத்தனை வயது சென்றாலும் அம்மா எங்களோடு இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். ஈடுசெய்ய முடியாத இழப்பு தாயின் இழப்பு!...