யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நமசிவாயம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கொக்குவிலில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கொக்குவில் நந்தாவில்லைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பித்துரை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கோப்பாய் வடக்கு வராம்பற்றைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதர் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குருநாதர் நமசிவாயம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, தயாளினி, விமலினி, ஜெயந்தினி, சசிதரன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
விஜயநாதன், சிவபாதம், கதிர்காமலிங்கம், உமாபுத்திரன், திருமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகஜன், நித்லா, பிரியங்கா, துவாரகா, கதீஷ்யா, ருஷந்யா, நாகபூஜா, பிரசாந், பிரவீன், சக்திகா, சர்வீகா, கபில், இஷானி, செந்தூரன், காண்டீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சயிலேஷ், கியாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எத்தனை வயது சென்றாலும் அம்மா எங்களோடு இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். ஈடுசெய்ய முடியாத இழப்பு தாயின் இழப்பு!...