5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஈஸ்வரி நமசிவாயம்
(இரத்தினேஸ்வரி)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 92
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினேஸ்வரி நமசிவாயம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் இமைக்கும் நேரத்தில்
ஐந்து ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஐந்து ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
எத்தனை வயது சென்றாலும் அம்மா எங்களோடு இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். ஈடுசெய்ய முடியாத இழப்பு தாயின் இழப்பு!...