கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு குளியாப்பிட்டி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இஷந்தன் இராமலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 09-11-2025
ஈராண்டு கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
எம்முள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்.
உமக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடும்...
எல்லா வலிகளையும் வார்த்தைகளில்
சொல்லிவிட முடியாது
ஓசையின்றி அழுகின்ற நீண்ட
வலிகளுடன் கலங்கி நிற்கிறோம் உங்களை நினைத்து
நீண்ட காலம் எம்மோடு வாழ்ந்திருவாய்
என எண்ணி பல எண்ணஙகள் கொண்டிருந்தோம்
கணப்பொழுதில் வந்த செய்தி
எங்களை கதிகலங்க வைத்ததுவே!
உங்களை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
மீண்டுமோர் பிறப்பிருந்தால்.....
எங்களிடமே வந்துவிடுங்கள்....
உங்கள் பிரிவுத் துயரால் வாடும்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்...