Clicky

பிறப்பு 04 OCT 1955
இறப்பு 05 AUG 2023
அமரர் இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் (குமார்)
வயது 67
அமரர் இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் 1955 - 2023 மாமூலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அமிர்தநாதர் (பெரியன்ரி) குடும்பம் 11 AUG 2023 United Kingdom

ஜெயம் கொண்ட குமாரின் நினைவாக .... வேலை விட்டு வீடு வந்து வியர்வை காயு முன்னே - இங்கு வேலை எல்லாம் முடிந்ததென்று வேறு வேலை தேடிப் போனாயோ? கண்டம் விட்டு கண்டம் போ(ய்)க கடும் குளிரில் குருதியும் உறையும் குவிந்த பனி தள்ளும் போதே குளிர்ந்து உடல் விறைத்துப் போகும். ஐயா அம்மாவிற்கு அளவிலா ஆனந்தம் அடுத்தடுத்துக் குழந்தைகள் அதிலும் பெட்டைக்கு கடுவன் எண்ணிப் பார்த்தால் ஏழுக்கு மூன்றாய் தசத்தில் நின்றது. வீட்டின் நிலை தெரிந்து, சூழு வர நாட்டில் தொடரும் அவலம் கருதி குடும்ப நிலை உயர்த்தும் செயலாய் குடியெயர்ந்து, குறியாய் நின்றாய். தேவையான பொருள் சேர்க்க, தனதுடல் உயிர் துச்சமாக, அனைவரும் கரை சேரக் களமமைத்தாய் உனதருமை உறவுகளுக்காய் உனைத்தந்தாய். இம்மானுவேல் எனப் பெயருனக்கு இதற்காய் தான் வைத்தாரோ? ஜெயம் கொண்டு வந்த ஜெயக்குமாருக்கு நன்றி. வாழ்வெல்லாம் முடியும் ஓர் நாள் வாழ்ந்ததிற்கு அடையாளம், பலர் மனதில் வாழ்நாள் முழுவதும் வாழ்வதாம் வாழும் நாளெல்லாம் நன்றி சொல்வோம். நடந்து வந்த நாளெல்லாம் நன்றே செய்து நின்றாய் எத்தனை நாள்தான் இப்படியாய் .... நன்றே இளைப்பாறு இறையடியில்! அமிர்தநாதர் (பெரியன்ரி) குடும்பம் மாமூலை. 11/08/2023

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Aug, 2023