எனது அருமை நண்பர் தி்ரு செல்லத்துரை ஐயா அவர்கள் பண்பும் பாசமும் நிறைந்த உயர்ந்த மனிதர்! நடப்புக்கு மதிப்பு கொடுப்பவர்! அவரின் சிரித்த முகமும் ,கனிவான பார்வையும் என்றும் மனக்கண் முன் ஜொலித்துக் கொண்டே இருக்கிறது! அவரது கணீர் என்ற கம்பீரக்குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!அவர் ஓர் சிறந்த பக்திமான்!நாம் இருவரும் சகல ஆல்பங்களுக்கும் ஒன்றாகவே செல்வோம்!ஆலய தொண்டு செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்! திறந்த மனமும்,பரந்த நோக்கமும் நற் சிந்தனையும் உடையவர்! தினசரி காலை மணிக்கும்,மாலை 7. 00 என்னுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரப்பார்,அறிவுரைகளையும் கூறுவார்! சட்டன் தமிழ் முதியோர் சங்கத்தின் உயிர் நாடியாக விளங்கியவர்! சங்க கூட்டம் ஆரம்பிக்கும் போது தனது கணீரென்ற குரலால் தேவாரம் படித்து ஆரம்பித்து வைப்பார்!அது மட்டுமல்ல பல சேவைகளையும் செய்வார்!பல ஆலோசனைகளையும் தருவார்!நான் உயிர் தோழனை இழந்து விட்டேன்!சட்டன் தமிழ் முதியோர் சங்கம் திறமை வாய்ந்த அங்கத்தவரை இழந்து விட்டோமே என்று ஆறாத் துயரில் மூழ்கி கிடக்கிறது!அன்னாரின் ஆத்ம சாந்திக்காக நாம் எல்லோரும் பிராரதிக்கி்றோம்! ஓம் சாந்தி! சாந்தி!சாந்தி!