1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இலங்கைநாதன் செல்லத்துரை
வயது 82
Tribute
50
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலங்கைநாதன் செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி
தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்