யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் தயாபரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று சென்றும்
அணையவில்லை எங்கள் துயரம்
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
வாழ்வியல் தத்துவம் நாங்கள்
அறியாது தவிக்கின்றோம்
பிறப்பும் இறப்பும் உலக
இயக்கத்தின் கட்டாயம்,
ஆனால் பாசமும் பந்தமும்
பிரிவில்லாத் தொடர் வலைகள்!
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
இன்று நீங்கள் இல்லாமல் தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்
உங்களின் ஆத்மா சாந்திபெற ஆண்டவன்
காலடி பணிகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!