பிரான்ஸ் Ris-Orangis ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எட்மொன் ஓஸ்கார் அவர்களின் நன்றி நவிலலும்.
எம் உணர்வின் உயிரே !
உயிர்ப்பின் பொருளே
எம் இருப்பின் நிலையறிந்து
பொறுப்புடன் இருந்தவரே
எம் வாழ்வை கல்லாக்கி
கனவாகிப் போனாயோ ?
நீ இல்லாத வெற்றிடத்தில்
இருந்து
நீ இருக்கும் திசை நோக்கி
கை கூப்பி வணங்குகின்றோம்.
ஓம் சாந்தி
நீங்கா நினைவுகளுடன் ..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I am so sorry to hear of the loss of your son . ( Bama & Murali)