பிரான்ஸ் Ris-Orangis ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எட்மொன் ஓஸ்கார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று முடிந்தாலும் அன்பு மகனே
ஆழப்பதிந்து விட்ட ஆறாத்துயரமது
அகலவில்லை இன்னும் எம்மைவிட்டு
அம்மாவும் அப்பாவும் ஆற்றொணா வலி தாங்கி
அனலிடைப் புழுவாய் வெந்து துடிக்கின்றோம்
ஆறாத்துயரதனில் அழுது புலம்புகிறோம்
உனது நகைச்சுவையும் நயமான பேச்சும்
நினைவில் நின்றாட நெஞ்சம் கனக்கிறதே
நீ எமை விட்டுப் பிரிந்த நாள்முதலாய்
நடைப்பிணமாய் நாம் ஆனோம்
நித்திரையும் இல்லை நிம்மதியும் இல்லை
நினைவலைகள் வந்து வந்து நிரம்பி வழிகிறது
மடை திறந்த வெள்ளம் போல் மனம் நிறைந்து
மனப்படமாய் தொடர்கிறது
மீண்டும் நாம் எப்போ உனைக் காண்போம் என
எம் இதயம் கேட்கிறது
மீண்டு வருவாயோ மகனே நீயும்
எம்மனக்குமுறல் தீர்ப்பாயோ
போகுமிடமெல்லாம் என் செல்வமே - உன்
புன்சிரிப்பு எம்மைக் கொல்லாமல் கொல்கிறதே
பார்த்துப் பார்த்து உம்மை
பாங்காய் வளர்த்து வந்தோம் - உம்
ஏற்றமதை எண்ணி எண்ணி இறுமாந்திருந்தோமே
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைந்ததுபோல்
விளைந்த பயிரின் விளைச்சலை பார்க்கமுன்னே
காலனவன் தன் கடமை முடிக்க வந்தானே
கதி கலங்கி நிற்கிறோம்...
I am so sorry to hear of the loss of your son . ( Bama & Murali)