1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 FEB 1952
இறப்பு 03 DEC 2020
அமரர் எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை
பிரபல ஆங்கில ஆசிரியர், முன்னாள் யாழ் கல்வித்திணைக்கள ஆங்கில ஆசிரிய ஆலோசகர், ஓய்வுபெற்ற சர்வதேச பாடசாலை அதிபர்- Leighton Park International School, Borella- Colombo
வயது 68
அமரர் எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை 1952 - 2020 ஹற்றன், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், ஹற்றனைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மாத்தளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

“நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு;
அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். ” சங்கீதம் : 37: 37

அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வம் ஐயா நீங்கள்...!
 
ஓர் ஆண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும்
உங்கள் நினைவுகள் கல்மேல் பொறித்த
எழுத்துக்கள் போல் எங்களை விட்டு அகலவில்லை,
அகலவும் மாட்டாது என் பாசமிகு கணவர்
எங்கள் ஆருயிர் Dada/தங்கத் தாத்தா.

எங்கள் இன்ப துன்பங்களை நீங்கள் எம்
அருகிலிருந்து பங்கெடுத்துக்கொள்வதை நாம்
உணருகின்றோம். நீங்கள் இப்பூமியில் தற்காலிகமாக
இல்லையெனும் நினைவு நெஞ்சுருக்கினும் பரலோகத்தில் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவுடன் கூடிய நித்திய வாழ்வில் உங்களோடு
இணைவோம் என்பதில் சிறிதும் ஐயமின்றி ஆறுதல்
அடைகின்றோம் எம் அன்புச் சிகரமே.

"பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள்
என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து
இளைப்பாறுவார்கள்;அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்;
ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று." வெளிப்படுத்தல் 14:13

“அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய
நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும்
வானத்திற்கும் மேலானது.” சங்கீதம் 148 : 13

"தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன்
அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்". I யோவான் 5:11

"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்;
அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை
என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை." யோவான் 10:28

" என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு
நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜீவ அப்பம் நானே." யோவான் 6: 47- 48

"தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக
அவருக்கு ஸ்தோத்திரம்". 2 கொரிந்தியர் 9 :15

என்றும் நினைவகலா அன்பு நினைவுகளுடன் குடும்பத்தினர்!!! 

தகவல்: குடும்பத்தினர்