Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1952
இறப்பு 03 DEC 2020
அமரர் எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை
பிரபல ஆங்கில ஆசிரியர், முன்னாள் யாழ் கல்வித்திணைக்கள ஆங்கில ஆசிரிய ஆலோசகர், ஓய்வுபெற்ற சர்வதேச பாடசாலை அதிபர்- Leighton Park International School, Borella- Colombo
வயது 68
அமரர் எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை 1952 - 2020 ஹற்றன், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், ஹற்றனைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மாத்தளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட எபனேசர் ஞானானந்தன் செல்வதுரை அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று ஆண்டவரின் திருப்பதங்களை சரண்டைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Stephen செல்வதுரை, ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், கிறேஸ் பவளமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீதாகுமாரி(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷியானந்தன்(IT Auditor, KPMG- பிரித்தானியா), சிந்துஜா(ஆசிரியை- அவுஸ்திரேலியா), ஜெருஷா(Accountant- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்ற பத்மாதேவி(இலங்கை), சாரதாதேவி(அவுஸ்திரேலியா), செல்வானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற கருணானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாதேவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசபை(அவுஸ்திரேலியா), எஸ்தர்(இலங்கை), மற்றும் ரூபி(கனடா), பிரின்ஸி(பிரித்தானியா), குளோரி(பிரித்தானியா), ரஞ்சி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரணித்தா(பிரித்தானியா), வசந்தன்(பிரித்தானியா) மற்றும் நிலானி(கனடா), சூட்டி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஷா(பிரித்தானியா), Ivor ஜெபச்சந்திரன்(அவுஸ்திரேலியா), கண்ணாளன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Eileen விஷ்விதா(பிரித்தானியா), சீர்த்திகா(அவுஸ்திரேலியா), Stephen விஷாந்தன்(பிரித்தானியா), ஆராதனா(பிரித்தானியா), அப்திகா(அவுஸ்திரேலியா), ஆதிரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாத்தளை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்