Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 APR 1940
இறப்பு 24 MAY 2024
அமரர் ஈஸ்வரி தில்லைநாதன் 1940 - 2024 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஈஸ்வரி தில்லைநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அம்மா!

நீங்கள் கடைசியாக கட்டியணைத்து
இரண்டு வருடங்கள் ஆகின்றது
நிரந்தரமாக உடைந்து இதயம் எங்கு சென்றாலும்
 உங்கள் ஞாபகங்கள் வந்து
மோதிக்கொண்டே இருக்கின்றது

 உங்களை நினைக்கும் போது வரும்
 கண்ணீரை நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது..

காலங்கள் பல கடந்தாலும்
 கண்மணிகள் நாம் கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறை வரம் ஏதும்
 தாரோயோ அம்மா...

உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது ஓவ்வொரு
 நொடிப் பொழுதும் நாங்கள்
 ஏங்குகிறோம் அம்மா...

உங்கள் அன்பும், பாசமும், எல்லாமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்...
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...

கண்ணுக்குள் மணிபோல்
இமைபோல் காத்தோயே அம்மா...
உங்களை காலன் எனும் பெயரில் வந்த
கயவன் களவாடி சென்றதேனோ...

நீங்கள் விண்ணில் கலந்த நாள் முதல்
எங்கள் விழிகள் உங்களையே தேடுகின்றது அம்மா!

தகவல்: குடும்பத்தினர்