யாழ்ப்பாணம் 5ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு JA-ELA ஐ வதிவிடமாகவும் கொண்ட டானிசியஸ் றோனி டிக்ஸன் அவர்களின் நன்றி நவிலல்.
நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்-எம்
விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீர் உம் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு
உம் நினைவுகள் இன்றும் எம் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொண்டோம்
உம்மால்-இன்று
வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய் நீ
தோன்றுவதாய் எண்ணி...!!
என்றும் உந்தன் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.