

-
19 JUL 1967 - 15 MAR 2022 (54 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ்ப்பாணம் 5ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு JA-ELA ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த டானிசியஸ் றோனி டிக்ஸன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீலவிழிகள் நீர்சொரிய
நிறைந்ததுவோ ஈராண்டுகள்
நிறைநிலவே!
நீங்கிடாதே
உம் நினைவு
மண்ணிலே வீழ்ந்த
மழை மீண்டும் விண்ணுக்கே
செல்லுமென்பார் விண்ணுக்குச்
சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம் கண்ணிலே வழியும்
நீரை உங்கள் கடைக்
கண்ணால்
பாருங்கள்!
உமை
நினைத்தே உருகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும்,
கருமுகிலும் இவ்வுலகில் போற்றி
வாழ்கின்ற காலம்வரை...
எம் கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில் வீற்றிருக்கும்
இறுதி காலம்வரை...
உங்கள்
நினைவுகளெல்லாம்
எங்களோடு
என்றென்றும்
நிறைந்திருக்கும் வணங்குகின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன் தாய், தந்தை,
மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )
