டென்மார்க் Vejen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷன் ராஜகுமார் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய்
இவ்வுலகை விட்டு....?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது....?
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கும்.
நீங்காத நினைவுகள் தந்தாயே தர்ஷா
நின்றாலும் நடந்தாலும் இருந்தாலும்
உன் நினைவு வாட்டுதெம்மை
தாய்நாடு வந்திறங்கி
கால்தடம் பதித்த இடம்கூட
அழியமுன்னம் தவிக்கவிட்டு போனாயே தர்ஷா
உன்பிரிவு ஒவ்வொருநாளும்
ஒருயுகம் போல் இருக்குதடா தர்ஷா
கண்மூடி விழிப்பதற்குள்
கனவுபோல கைவிட்டுபோனாயே தர்ஷா
கைகோர்த்து நடப்பதற்கு நீ இல்லையே தர்ஷா
காணும் கனவினிலும் வந்து போறாயே தர்ஷா
உன்நினைவு என்றென்றும்
நிலைத்திருக்கும் எம்நெஞ்சில்.
பிரம்மா ! நீ எழுதிய புத்தகத்தை
முதல்பக்கம்கூட படிக்காமல்
நீ ஏன் மூடிவிட்டாய் இதுநியாயமா?
ஆறாதுயரத்தில் அழுகின்றோம் உன்பிரிவில் தர்ஷா
உன்நினைவில் தவிக்கும் அப்பா அம்மா அண்ணா
உன்நினைவு என்றென்றும் உறைந்திருக்கும் எம்உள்
என்ன நடந்தது? எப்படி நடந்தது?
எனும் உண்மை அறியாமலே
"தன்னை " சாவுக்குத்
தாரை வார்த்திட்ட
"தர்ஷன்" எனும் தளிரே!
தாங்கவொண்ணாப் பேரிழப்பாய்த்
தவிக்க விட்டுப் போனவனே!
வாழும் இளம் குருத்து!
" வயதினிலே" விபத்துன்னைப்
பாழும் சாவென்னும்
பாம்பாகி விழுங்கியதே
இரட்டைப் பிறவியராய்
இனிதே வந்து உதித்துப்
பெற்றோரும் உற்றோரும்
பெருமகிழ்ச்சிக் கடலாடும்
பேறுதனை உடைத்தெறிந்தே
தனி ஒருவன் ஆக நீ
மீளா நெடும் பயணம்
மேற்கொண்டாய் நாம் சரிந்தோம்
செல்வன் தர்ஷன் ராஜகுமார் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our Deepest Condolences to your lovely son ??Darrshan and Rest in peace. From Malar (Pannagam) Yogitha ( London )