Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 18 DEC 1934
இறப்பு 05 DEC 2021
அமரர் சிறில் வீரசிங்கம்
ஓய்வுபெற்ற நில அளவை திணைக்கள பிரதம உத்தியோகத்தர்
வயது 86
அமரர் சிறில் வீரசிங்கம் 1934 - 2021 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பு, கனடா Tornoto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிறில் வீரசிங்கம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக் கிரியைகள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி: இல.114, திருநாவற்குளம், வவுனியா.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.